SNEA சங்கத்தின் கடிதமும் ...
சில நெறி சார்ந்த கேள்விகளும் ...
SNEA சங்க பொதுசெயலாளர் DOT செயலருக்கு எழுதியுள்ள கடித்ததில் ( கடித எண் : SNEA /CHQ /SEC DOT /2015-18/21 தேதி 21.8.2017) 3 வது ஊதிய மாற்றம் என்பது EXECUTIVE களுக்கு மட்டுமே ,NON EXECUTIVE களுக்கு அல்ல என குறிப்பிட்டு எழுதியுள்ளார் Pension revision for BSNL pensioners was not
part of terms of reference of 3rd PRC and hence no recommendation is
given by 3rd PRC in this regard. Another reason is that 3rd
PRC is only for the Executives, not for the Non-Executives.(SNEA இணையத்தில் 21.8.2017 தேதியில் காண்க )
ஊதிய உயர்வை அனைவரும் எதிர்பார்த்திருக்கும் தருணத்தில் NON EXECUTIVE ஊழியர்களை , இதெல்லாம் உனக்கில்லை எனும் இந்த கருத்தோட்டம் நியாயம் தானா ?
NON EXECUTIVE களுக்கு இல்லை என்றால் ? பிறகெதற்கு NON EXECUTIVE சங்கமான BSNLEU சங்கத்தை இணைத்துக்கொண்டு 30%கேட்டு 27.7.2017 ல் வேலைநிறுத்தம் செய்யவேண்டும் ?
NON EXECUTIVE ஊழியர்கள் 3வது ஊதியக்குழுவிற்கு தகுதியில்லையென்றால் ..... ? வேலை நிறுத்தம் செய்திட்ட BSNLEU ன் வேலை நிறுத்தம் எந்த வகையில் வகைப்படுத்துவது ?
NFTE துறையின் அமைச்சரை சந்தித்தற்கும் ...பிரதமருக்கு கடிதம் எழுதியதற்கும் ...கருத்து கற்பித்து விட்டு ...தாங்கள் மட்டும் முந்திட ...NON EXECUTIVE ஊழியர்களை பலி தருவது நியாயமா ? இது இணைந்த போராட்டங்களின் நம்பகத்தன்மையை கேள்விகளுக்கு ஆட்படுத்தாதா ?
தோழமையுடன் ...
ஒன்றுபட்ட போராட்டங்களில் அனைவரையும் இணைத்து போராடி ,அனைவருக்கும் கோரிக்கை வென்றெடுத்து வழங்கும் NFTE பேரியக்கத்தின்
குடந்தை NFTE மாவட்ட சங்கம்