ஊதிய உயர்வு பெற்றிட ... டவர் கம்பெனி தடுத்திட ...
சஞ்சார் பவன் நோக்கி பேரணி .. டெல்லியில்
பத்தாயிரம் மேல் எண்ணிக்கை திரளாய் ...
பங்கேற்ற பேரணி !
DOT அலுவலகம் நோக்கி பேரணி செல்ல
டெல்லி காவல்துறை ...சாலைகளில் அமைத்தது தடை !
கோபத்தின் ரூபமாக ...
தோழர்கள் தடைகளை தள்ள ...காவல்துறையும் எதிர் தள்ளு தள்ள ..
ஒட்டகம்... குட்டி ஆடாய் மாறாது போல ..
கோலியாத் குள்ள மனிதனாய் சுருங்காதது போல ...
தடை கண்டு தயங்காது ...தடுப்புகளை தள்ளினர் நம் தோழர்கள் ...
உக்கிரம் ...தாங்காது ..
காவல் துறை கயிறுகளால் தடை அமைக்க ...
கயிறுகளும் இழுபட்டது ...
கயிறு இழுத்ததில் வெற்றி நம் தோழர்களுக்கே !
டெலிகாம் செயலர் திருமதி அருணா சுந்தர்ராஜன்
நம்மவர்களை சந்திக்க மறுப்பு ...
மறுத்ததோடு அல்லாது ...கொசுறு இணைப்பாய் ...
கூடுதல் செயலர் திரு .சிவ சைலத்தை சந்திக்க
ஆலோசனை தந்தார் ...
கோளாறுகளின் பிதாமகர் திரு .சிவ சைலத்தை சந்திக்க
நம்மவர்கள் மறுப்பு ...
டெலிகாம் செயலர் பேசியே தீர ..
தலைவர்கள் தரையில் அமர்ந்து அறப்போர் ...
நம் நியாயம் உணர்ந்த காவல் துறை
டெலிகாம் செயலர் திருமதி அருணா சௌந்தர்ராஜனிடம் ...
சட்டம் ஒழுங்கு காத்திட அழுத்தம் கொடுக்க ..
பின்னர் ...
25 நிமிடம் பேச்சு வார்த்தையில் பங்கேற்றார்
டெலிகாம் செயலர் திருமதி அருணா சௌந்தர்ராஜன் !
BSNL ல் ...
வேகத்தடைகளே ...சாலைகளாகிவிட்ட
போராட்ட களத்தில் ...
எழுச்சியான பேரணியாய்
டெல்லி பேரணியை மாற்றிய ... பங்கேற்ற
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..!
24.2.2018 ல்
மத்திய அமைச்சர் சின்ஹா உடன்
தொழிற்சங்க தலைவர்கள் சந்திப்பு நாளை !
எதிர்ப்பு குரல் விரும்பாத ...
வலது சாரி பாசிச சித்தாந்தம் வலம் வரும் தேசத்தில் ..
திமிங்கலங்களே கடலில் செத்து மிதக்கும் சூழலில் ..
கெண்டை மீன் குஞ்சுகள் துள்ளி எழுந்து ஆர்ப்பரித்த ...
டெல்லி போராட்ட கோப தீயை ...
தேசமெங்கும் பரப்புவோம் ...
கோரிக்கைகள் தீரும் வரை !