Skip to main content

காரைக்கால் வாடிக்கையாளர் சேவை மையம் ..?
அத்தியாவசிய அடிப்படை வசதிகள், முன் ஏற்பாடு கவனக்குறைவால் , சரிந்த BSNL
மரியாதை .....

பாட்டரி மற்றும் மின் மாற்று ஏற்பாடுகள் அறவே இல்லை பல மாதங்களாய் ..
சுனாமி வந்த பொழுது தானே என நீங்கள் நினைத்தால் அது தவறு .! கடந்த ஆறு மாதமாய் தொடரும் அவலம் ..?
வாடிக்கையாளர்கள் திரண்டு , BSNL காரையில் முற்றுகை ...
காரைக்கால் நிர்வாகமோ , கும்பகோணம் நிர்வாகத்தை கை காட்டியது ,
மாவட்ட நிர்வாகம் தலையிட்டது ...
வழக்கமான செய்தி தானே இது என்று நீங்கள் நினைக்கலாம்
தீர்ந்தபாடில்லை எனவே தனியார் தொலைகாட்சிகள், BSNL பாரீர் அவர்கள் சேவை பாரீர், என மானம் வாங்கியது . போதா குறைக்கு உள்ளூர் சேனல் வேறு கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கியது.
நமது தோழர்கள் மற்றும் தோழமை சங்க தோழர்களும் தலையிட்டு ,நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் கண்டார்கள் .
தற்காலிக தீர்வு காணப்பட்டது .
நெறி சார்ந்த கேள்வி : இதற்க்கெல்லாம் யார் தான் பொறுப்பு ?
அடிமட்ட தோழன் பல்பம் , பென்சில் , எடுத்தான் என்றால்BSNL இமேஜ், BSNL இமேஜ் என தாண்டி குதிப்பதை என்ன சொல்லுவது ..? இது குறித்து ஓர் அறிக்கையாவது மாவட்ட நிர்வாகம் கேட்குமா..?
மேலே பறப்பது வெறும் பட்டம் அல்ல .....BSNL இன் ..........?



Popular posts from this blog

தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான எஸ்.எஸ். தியாகராஜன் (73) சென்னையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சென்னை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரான எஸ்.எஸ்.தியாகராஜன் திருமணம் ஆகாதவர். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் அறை ஒன்றில் வசித்து வந்தார். சிறந்த மார்க்சிய அறிஞரான அவர் ஜெர்மனியில் ஓராண்டு காலம் மார்க்சிய கல்வி பயின்றவர். சிறந்த தொழிற்சங்கவாதியான தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச்செயலாளராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய மூத்த துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாந...

பாசிசம் ஒழிக

சினிமாவில் கூட ஒரு கொடூரமான வில்லனை காட்ட இப்படி ஒரு காட்சி வைக்க முடியாது. Exaggeration என்று சொல்லிவிடுவார்கள். நிஜத்தில் இப்படி ஒரு கொடூரம். இந்த நாடு எங்கே செல்கிறது? பாசிசம் ஒழிக  

யூனியன் பேங்க் நமக்கு லோன் தருவதை விட மிச்ச வேலையெல்லாம் நல்லா தான் பாக்குறான்!