Skip to main content
BSNLEU-யின் தீமை கொல்ல நாணம் என்ன ... ? ?

தோற்றவர்கள் வழக்காடு மன்றம் ஓடுகிறார்கள் என நியாயம் பேசுகிறார்கள் சிலர்..? அகில உலகத்திலும் இல்லாத புதிய முறையையா NFTE கேட்கிறது? வெறும் 46.57 % சத வாக்குகளை பெற்று வெற்றி வெற்றி என கூச்சலிடுவதை பற்றியெல்லாம் கவலயில்லை..!! 46.57% சத வாக்குகளை BSNLEU பெற்றுள்ளது என்றால் BSNL-ல் 54% சத ஊழியர்கள் BSNLEU இன் எதிராக உள்ளார்கள் என்பது தான் பொருள். ஒரே சங்கம் என்றால் அது 51% சத வாக்கினை பெற்றிருக்கவேண்டும். இந்த தர்க்க நெறி (LOGIC ) அடிப்படையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு NLC பொதுத்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தந்த தீர்ப்பின் வழிகாட்டல் சாராம்சம் " எண் கணக்கில் முதல் இடம் பிடித்த சங்கத்திற்கும் 51% சதம் இல்லையெனில் 2வது இடம் பிடித்த சங்கத்தையும் அங்கீகரிக்கவேண்டும், இரு சங்கங்களும் சேர்ந்தபிறகு 51% சத பிரதிநிதித்துவம் எட்டப்படவில்லையெனில், 3-வது இடத்தை பிடித்துள்ள சங்கத்திற்கும் அங்கிகாரம் தரலாம் " இதுவே NLC-ல் தந்திட்ட நீதிமன்ற வழிகாட்டல்.

இது BSNL-க்கு பொருந்தாதா .... ?

"நீதி மன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டுவது ஜனநாயக விரோதமா.....? "

அதையெல்லாம் விட்டுத்தள்ளுவோம் ..... புறந்தள்ளுவோம், கணக்கு , புள்ளி விபரங்களையெல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு தோழனை, தோழியரை, எல்லாம் அறிந்தோரை நோக்கி

என் கேள்வி இது தான் ..... ! சென்ற வருட போனஸ் உடன் - வரும் ஆண்டு போனஸ் - வாங்கிதருவோம் என உலகில் எவரும் சொல்லாத பொய் சொல்லி ( தோழர் செல்லப்பா குடந்தையில் சொன்னது ) வாக்கு பெற்ற ........ BSNLEU -

VRS குறித்து குழு 01.02.2011-ல் அமைக்கப்பட்டு இன்று வரை இந்த நிமிடம் வரை அது குறித்து மௌனம் காக்கும் குழி பதுங்கிகள் .......

தனக்கு வாக்களிக்கவில்லையென குன்னூரில் SNATTA இளம் தோழர்களை கண்முடித்தனமாய் தாக்கிய இவர்களை அப்புறப்படுத்த
தீமை கொல்ல நாணம் என்ன ....... ? ? ?













Popular posts from this blog

தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான எஸ்.எஸ். தியாகராஜன் (73) சென்னையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சென்னை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரான எஸ்.எஸ்.தியாகராஜன் திருமணம் ஆகாதவர். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் அறை ஒன்றில் வசித்து வந்தார். சிறந்த மார்க்சிய அறிஞரான அவர் ஜெர்மனியில் ஓராண்டு காலம் மார்க்சிய கல்வி பயின்றவர். சிறந்த தொழிற்சங்கவாதியான தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச்செயலாளராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய மூத்த துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாந...

பாசிசம் ஒழிக

சினிமாவில் கூட ஒரு கொடூரமான வில்லனை காட்ட இப்படி ஒரு காட்சி வைக்க முடியாது. Exaggeration என்று சொல்லிவிடுவார்கள். நிஜத்தில் இப்படி ஒரு கொடூரம். இந்த நாடு எங்கே செல்கிறது? பாசிசம் ஒழிக  

யூனியன் பேங்க் நமக்கு லோன் தருவதை விட மிச்ச வேலையெல்லாம் நல்லா தான் பாக்குறான்!