நெஞ்சில் நின்றவன் நீ!

ஜூன் - 7

ஜெகன் நினைவு நாள்
செம்பட்டை தலை தினம் காணும்
அழுக்கு சட்டை
புழுதி படிந்த முகம் - கொண்ட
தொழிலாளியின் முதல்வனே!

எங்கள் ஆசானே...
தளும்ப... தளும்ப புன்னகை
தும்பை பூ புன்னகை
சிற்பியும் கொணரமுடியா
காந்த புன்னகை.... சொந்தமே!
ஆசானே... எங்கள் ஜெகனே....!!

புன்னகையையும் ரசித்தோம்
தலை முடி கோதி எரிமலையாய்
வெடித்த கோபமும் ரசித்தோம்...!

மனித நேயமே! எளிமையே!
உன்னை சத்தமிட்டு வணங்கினால்
BSNL தொழிலாளியின்
சராசரி ஆயுள் கூடும்....!
சத்தமிட்டே வணங்குகிறோம்....!- ம. விஜய் ஆரோக்கியராஜ்