அங்கீகார வேதாளமாய்....BSNLEU!



BSNLEU  வின் சங்க அங்கீகாரம் வரும் 13.2.2013 நிறைவுறுகிறது. அங்கீகாரம் இல்லாது வாழ முடியாத BSNLEU சங்கம். ஏனைய 10 தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ள புதிய சங்க அங்கீகார விதிகளை ஏற்றுக்கொள்ளாது மட்டுமல்ல... பழைய சங்க அங்கீகார விதிகளை கொண்டு தேர்தலை நடத்த கோருகிறது.

அதற்க்கு BSNLEU வைக்கும் வாதம் என்னவென்றால் " புதிய விதிகளை உருவாக்க கால அவகாசம் இல்லை என்பதும் , " அங்கிகாரம் சங்கம் என்பது  இல்லாது BSNL தொழிலாளி வாழ முடியாது" என்பதும் ஆகும் .

BSNL பழைய தேர்தல் விதிமுறை மற்றும் விகிதாச்சாரம் அபத்தம் குறித்த அபத்தம் களைவதற்கு ஒன்றும் பெரிய அவகாசம் தேவையில்லை. மேலும் BSNL ல் மட்டும் தான்... அங்கிகாரம் சங்கம்  என்ற (BSNLEU ) ஒன்றால் எல்லாம் இழந்த தொழிலாளி உள்ள தொழில்தடம் ஆகும்.

கம்ப்யூட்டர் உள் நுழைவை எதிர்த்தவர்கள் ... cadre restructure  எனும் அற்புதம் எதிர்த்தவர்கள் ....  இப்பொழுது புதிய விதிகளை எதிர்ப்பது ஒன்றும் ஆச்சரியம் அல்ல. களத்தில் விளையாடாது விமர்சிப்பதில் வல்லவர்கள் BSNLEU  காம்ரேட்கள் .

அவர்கள் அங்கீகார நோயாளிகள் .... அங்கீகார மருந்தை ... அம்புலிமாமா வேதாளமாய் கெட்டியாய் பிடித்துக்கொள்ள முயற்ச்சிக்கிறார்கள்.

வரும் தேர்தல் ....BSNLEU  வாரும் தேர்தல் !