என் உச்சி மண்டையில .... அங்கீகார மயக்கம்... சுர்....ண்ணுது!



தொழிற்சங்க தேர்தலில் , புதிய சங்க அங்கீகார விதிகளை BSNLEU  தவிர ஒரு சில குழு சங்கத்தை , தவிர NFTE  உடன் FNTO  உட்பட பெரும்பான்மை சங்கங்கள் , விகிதாசார பிரதிநிதித்துவத்தை, தலைமை தொழிலாளர் ஆணையர் முன்பு நடந்த கூட்டத்தில் ஏற்றுக்கொண்டதை  பொறுக்க முடியாத BSNLEU  சங்கம் , அங்கீகார போர்வை தன்னை விட்டு போய்விடுமோ  என  புதிய விதிகளை அமல்படுத்த தடையாய் , கூப்பாடு  போடுகிறது .

எந்த அளவிற்க்கென்றால் ...நிர்வாகத்திற்கு  புதிய சங்க அங்கீகார விதி குறித்த எந்த ஆலோசனையும் வழங்க மாட்டேன் என பள்ளி செல்ல மறுக்கும் பாலகனாய் தரையில் விழுந்து   அடம் பிடிக்கிறது .

எட்டு ஆண்டு அங்கீகாரம் ...  பொறுப்பை வளர்த்திடாது ... அதிகார மயக்கத்தை வளர்த்திருக்கிறது .

  க்ரூப் போட்டோவில்... தான் மட்டும் அழகாய்  இருந்தால் போதும் என நினைப்பதே குரூரம்  ... அனைவரும் அழகாய்  இருக்க நினைப்பது ஒற்றுமை .

தொடர் வெற்றியில்... செருக்கில் திளைக்கிறது.