ஏணியை கூரை மீது போடாது வானத்தை நோக்கி நிறுத்துவோம் !


தேர்தல் ...

அது சிம்மாசனத்தை கவிழ்த்திருக்கிறது 
கவிழ்ந்தவனை நிமிர்த்தி சிம்மாசனத்தில் அமரவைதிருக்கிறது ... அமர்ந்தவன் தானே என்றான் ... தூக்கி வீசி பாடம்  சொல்லி இருக்கிறது .

BSNLEU  சங்கம்  சந்தா செலுத்தும்  உறுப்பினர்  1,14,534 வாக்கும் எல்லாம் தனக்கே என்ற கணித சூத்திரம் பொய்த்துப்போனது !

NFTE  சங்கம் BSNLEU வின்  எதிர் வினை வாக்கை  தன்  வசம் ஈர்த்துள்ளது ....

BSNLEU சங்கம் தனது தேர்தல் முடிவு அறிக்கையில் ... " NFTE  தேர்தல் பிரசாரம் எல்லாம் கேட்டோம் ... அதையெல்லாம்  தீர்த்து வைக்கிறோம்  என அறிக்கை கூட விடவில்லை !

BSNLEU  என்ன நினைத்து  இருக்கிறது என்றால் ? BONUS  தொழிலாளி விரும்பவில்லை ! LTC விரும்பவில்லை ?
அதை போல இழந்த  எதுவும் விரும்பவில்லை எனவே தான் 
தனக்கு  அதாவது BSNLEU  சங்கத்திற்கு  ஆறாவது தேர்தலில் வாக்களித்தான் .... எனவே நான் அதை பற்றி  கவலைப்படமாட்டேன் என நினைக்கிறது ?

ஆனால் ...? FNTO சங்கம் 7%பெறமுடியவில்லை என செய்தி வெளியிட்டு மகிழ்கிறது ?

நாங்க இரட்டை இலைக்கு மட்டும் தான் 40 வருசுமா ... ஒட்டு போடுறோம் .. நாங்க சூரியனுக்கு 50 வருசமா ஒட்டு போடுறோம்  எனும்  என்ற தமிழக அரசியல் கலாச்சாரம் BSNL ல் வந்து விட்டதோ ? என நினைக்க  தோன்றுகிறது ?

 
என் தலைவர் படத்தினை வை ! எனது தலைவன் கருத்தில் கண்டன தீர்மானம் போடு என உள்ளாட்சி மன்றங்களில் நடைபெறும் மலிவு விளம்பரம் தவிர்த்து செயலாற்ற BSNLEU முன் வரவைக்க வேண்டிய கடமை நம் முன்னே ... செயலாற்றுவோம் வெற்றிபெறுவோம் ...
எனவே
ஏணியை கூரை மீது போடாது
வானத்தை நோக்கி நிறுத்துவோம் !