Skip to main content

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு


பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) செலவினத்தைக் குறைக்கும் வகையில், அதன் ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல்லுக்கு செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு சேவைக்குரிய நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துப்பூர்வ பதில் வருமாறு:
இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல்லுக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1,206.65 கோடி அளவுக்கு நிலுவைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதில், ரூ.1,053.84 கோடிக்குரிய கட்டணம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் சில முறையீடுகளை செய்துள்ளன.
நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வங்கி உத்தரவாதம் பெறுவது, மத்தியஸ்த முறையில் பேச்சு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி சேவையில் இருந்து செல்போன் சேவைக்கு வேகமாக மாறி வருவதால் பிஎஸ்என்எல் சேவை எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. தொலைத் தொடர்புத் துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த தேவைப்படும் முதலீடுகள் பிஎஸ்என்எல் வசம் இல்லை. அதன் ஊழியர்களுக்கான செலவினம் கூடுதலாக உள்ளது.
பிஎஸ்என்எல் புனரமைப்பு நடவடிக்கையாக, அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ.1,411 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் வளங்களை உரிய முறையில் பயன்படுத்தவும், அதன் ஊழியர் செலவினத்தைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிர்வாகமும் தனியாக புனரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சுமார் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கான செலவினம் குறையும். இந்தத் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வு செய்த பிறகு, பிஎஸ்என்எல்லுக்கு தேவைப்படும் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

Popular posts from this blog

சங்க பணி சிறக்க வாழ்த்துக்கள் .

  AIBSNLEA  வேலூர் மாநில மாநாடு -புதிய மாநில சங்க நிர்வாகிகள்  தலைவர் : தோழர் .T .தமிழ் செல்வன் SDE -சேலம்  செயலர் : தோழர் .C .துரையரசன் CAO -தஞ்சை   பொருளர் : W  V  ரங்கநாதன்  AO -சென்னை  மற்றும்  குடந்தை மாவட்ட தோழர் B .குரு மூர்த்தி JAO  மாநில செயற்குழு உறுப்பினர்  சங்க பணி  சிறக்க வாழ்த்துக்கள் .

தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான எஸ்.எஸ். தியாகராஜன் (73) சென்னையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சென்னை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரான எஸ்.எஸ்.தியாகராஜன் திருமணம் ஆகாதவர். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் அறை ஒன்றில் வசித்து வந்தார். சிறந்த மார்க்சிய அறிஞரான அவர் ஜெர்மனியில் ஓராண்டு காலம் மார்க்சிய கல்வி பயின்றவர். சிறந்த தொழிற்சங்கவாதியான தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச்செயலாளராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய மூத்த துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாந...

ஏணியை கூரை மீது போடாது வானத்தை நோக்கி நிறுத்துவோம் !

தேர்தல் ... அது சிம்மாசனத்தை கவிழ்த்திருக்கிறது  கவிழ்ந்தவனை நிமிர்த்தி சிம்மாசனத்தில் அமரவைதிருக்கிறது ... அமர்ந்தவன் தானே என்றான் ... தூக்கி வீசி பாடம்  சொல்லி இருக்கிறது . BSNLEU  சங்கம்  சந்தா செலுத்தும்  உறுப்பினர்  1,14,534 வாக்கும் எல்லாம் தனக்கே என்ற கணித சூத்திரம் பொய்த்துப்போனது ! NFTE  சங்கம் BSNLEU வின்  எதிர் வினை வாக்கை  தன்  வசம் ஈர்த்துள்ளது .... BSNLEU சங்கம் தனது தேர்தல் முடிவு அறிக்கையில் ... " NFTE  தேர்தல் பிரசாரம் எல்லாம் கேட்டோம் ... அதையெல்லாம்  தீர்த்து வைக்கிறோம்  என அறிக்கை கூட விடவில்லை ! BSNLEU  என்ன நினைத்து  இருக்கிறது என்றால் ? BONUS  தொழிலாளி விரும்பவில்லை ! LTC விரும்பவில்லை ? அதை போல இழந்த  எதுவும் விரும்பவில்...