பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மோசமான நிதி நிலைமைக்கு காங்கிரஸே காரணம்: ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மோசமான நிதி நிலைமைக்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணம் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார். இதுகுறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது புதன்கிழமை ர் பேசியதாவது:பிஎஸ்என்எல் நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளில் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2004-ஆம் ஆண்டு வரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிதி நிலைமை சீராக இருந்தது. சுமார் 10,000 கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக பிஎஸ்என்எல் விளங்கியது. ஆனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் 
கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இந்த நிலைமை தலைகீழானது. 
ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் 
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாகியது.
 ரூ.10,000 கோடி லாபம் ஈட்டிய நிறுவனம், தற்போது ரூ.8,000 கோடி நஷ்டத்தில் இயங்குவதற்குக் காரணம் முந்தைய காங்கிரஸ் 
ஆட்சியாளர்கள்தான். இதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்.
 பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து 
முயற்சிகளையும் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு
வருகிறது என்றார் அவர்.