DPE மற்றும் DOT செயலர்களுக்கு , அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 1.1.2017 முதல் ஊதிய மாற்றம் செய்திட நியாயமான காரணங்களை முன்னிறுத்தி BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் (BSNLEU -NFTE -SNEA -AIBSNLEA-BSNLMS-BSNLOA-BSNLBEA-BSNLBTU) கடிதம் அனுப்பியுள்ளது .
1. லாப நட்ட விதிமுறைகளின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும் விதிமுறைகளிலிருந்து BSNL க்கு ஏன் விதி விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
2. 10 ஆண்டுகளுக்கு பதில் 5 ஆண்டுகளுக்கு ...குறைந்தபட்சமாக 15% ல் ஊதிய உயர்வு கணக்கீடு முறையும் வலியுறுத்தப்பட்டுள்ளது .
3. பென்சன் பங்களிப்பு ACTUAL PAY கணக்கீட்டில் வழங்கவும் சொல்லப்பட்டுள்ளது .
4. ஆண்டுயுயர்வு தொகை (INCREMENT ) தற்பொழுது வழங்கும் முறைக்கு பதில் , 7 வது ஊதிய குழு பரிந்துரைத்த அனைவருக்கும் சீரான ( ஜனவரி 1 (or ) ஜூலை 1 ) தேதிகளில் வழங்கி சம்பள முரண்பாடுகள் தவிர்க்க சொல்லப்பட்டுள்ளது .