தாமதமான இன்சென்டிவ்வும் ...தீர்க்கமான உறுதிமொழியும் ..
புதிய LANDLINE மற்றும் BROADBAND இணைப்பு ...
தேடி கொண்டுவருவோர்க்கான ...இன்சென்டிவ்வை ...
தாமதபடுத்தும் போக்கை கண்டித்து ...
இன்சென்டிவ் இன்னும் ஒரு வருடத்திற்கு ...
வழங்கப்படவில்லை என்றாலும் ...
இன்சென்டிவ் கோப்பில் குதர்க்கமான கேள்விகளால் ...
மேலும்இரண்டு வருடம் இன்சென்டிவ் தாமதமானாலும் ...
அடுத்த மகாமகத்தின் பொழுது இன்சென்டிவ் வழங்கினாலும் ...
எங்களுக்கு வாழ்வளித்த BSNL ஐ காப்போம் ...
தெரு ...தெருவாய் ...
வீடு ...வீடாய் ...அலைந்து ...திரிந்து ...
புதிய இணைப்பு தேடும் பணியை ...
எவ்வித சுணக்கமும் இன்றி தொடர்வேன் ...
இது நிச்சயம் ... நிச்சயம் ...
என
முதல் நாள் உண்ணாவிரதத்தில் ...
தோழர் ...தோழியர்களால் ...
உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது ...