நமக்கான... யோகா


பரிவிருத்த திரிகோணாசனம் :  
            இடமும் வலமும் திரும்பி திரும்பி பார்ப்பது  இதன் மூலம் மாத சம்பளம் எப்பொழுது வரும் என அனைத்து திசைகளிலும் கழுத்தை திருப்பி பார்க்கும்பொழுது வலி ஏற்பாடாது தவிர்க்கலாம்  . BSNL எப்போ சம்பளம் கொடுக்குதோ அப்போ வாங்கி கொண்டு சந்தோசமடையும் எண்ணத்தையும் இந்த ஆசனம் கொடுக்கும் . சம்பளம் இன்று கிடைக்கும் எனும் வாட்ஸாப் மற்றும் இணைய செய்தி கேட்கும்பொழுது கோபம் வராமல் கோபத்தை கட்டுப்படுத்தும் .

அனுவிட்டாசனம் :
                     4G வருமா? வராதா?  என விட்டத்தை நோக்கி பார்வை உயர்த்தி பார்த்து கொண்டே இருந்திட  பயன்படும் . தனியார் செல் கம்பெனி எல்லாம் சீனா வில் EQUIPMENT வாங்கும்பொழுது BSNL மட்டும் ஏன் வாங்க வேண்டாம்னு சொல்ற என ஏன் ?  ஒரு மீடியாவும் கேள்வி எழுப்பவில்லை எனும் கோபம் மூலம் வரும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் .

கருடாசனம் :
                    வங்கியில் கடன் கிடைக்குமா ? சொசைட்டி பணம் கிடைக்குமா ? லோன் கிடைக்குமா ? என கழுகு பார்வை பார்த்துக்கொண்டே இருக்க பயன்படும் 

ஆனந்த பாலாசனம் :
       பழுது ஏதும்  பார்க்காத .. NPC  ஏதும் வழங்காத ... CLUSTER ஒப்பந்தக்காரரை கேள்வி கேட்காது மயிலிறகால் ஒப்பந்தகாரரை கடுமையாக கண்டித்தும் . தொழிற்சங்கங்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டு வாய்ப்பு கிடைக்கும் இடத்தில்  எல்லாம் கமிஷன் வாங்கி கொண்டு  வாழ . கிளி ஜோசிய கிளி போல உள்ளடங்கி மட்டும் வேலை செய்யும் பொறியாளர்களுக்கு ஏற்ற ஆசனம்  . ஊருக்கு உபதேசம் செய்து ஆனந்த மயமாய்  வாழ்வோர்க்கு ஏற்ற ஆசனம் .

நமக்கு தெரிந்த சில ஆசனம் குறித்து மட்டுமே விளக்கம் தந்துள்ளோம் . இன்னும் நிறைய ஆசனம் உள்ளது . BSNL காத்திட தற்பொழுது தேவையான ஒரே ஆசனம் 
" கோபாசனம் "