Rs 20 lakh fine on 2 telecom service providers for damaging roads in Greater Noida.The firms have been asked to remit the fine amount within 15 days, failing which legal action would be initiated against them, the authority said.CLICK HERE
தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான எஸ்.எஸ். தியாகராஜன் (73) சென்னையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சென்னை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரான எஸ்.எஸ்.தியாகராஜன் திருமணம் ஆகாதவர். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் அறை ஒன்றில் வசித்து வந்தார். சிறந்த மார்க்சிய அறிஞரான அவர் ஜெர்மனியில் ஓராண்டு காலம் மார்க்சிய கல்வி பயின்றவர். சிறந்த தொழிற்சங்கவாதியான தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச்செயலாளராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய மூத்த துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாந...