ஒப்பந்த தொழிலாளி ஏமாளியல்ல.....!"நாங்களும் சொன்னோம்" என்ற கணக்கிற்கு ஆர்ப்பாட்டம்! தனியார் ஒப்பந்தக்காரர் EPF-ESI செலுத்துவதில்லையாம். எனவே அதனை கண்டித்து BSNLEU ஆர்ப்பாட்டமாம். NFTE - ஒப்பந்த ஊழியர் சுயமரியாதை காத்து சுய உதவிக் குழுக்கள் போல ஒபந்த தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து நடத்திய ஒப்பந்த முறை குறித்து ஓலமிட்டவர்கள் ...... விஷம வதந்தி கிளப்பிய BSNLEU... (இப்போ மூச்சே காணோம்!)

தனியார் ஒப்பந்தமுறை வந்தால் கம்பன் சொன்ன ராமராஜ்யத்திற்கு பிறகு காண்டிராக்ட் ஊழியர்கள் வாழ்வு செழிப்பாய் இருக்கும் என, நிர்வாகத்திடம் மன்றாடிய சூரர்கள் என்று தனியார் காண்டிராக்ட்டை கண்டித்து ஆர்ப்பாட்டமாம்.

தனியார் காண்டிராக்ட் அமல்படுத்தப்பட்டு எத்தனை மாதங்கள் ஓடிவிட்டன! இப்பொழுதுதான் BSNLEU-விற்கு தெரிகிறது தனியார் ஒப்பந்தக்காரர் EPF-ESI செலுத்தாதது.

இப்பொழுது சிபிஐ-க்கு மனு போகவேண்டியது தானே! (தேரை இழுத்து சந்தியில் விட்டு விட்டு ஆர்ப்பாட்டம் நாடகம் வேறு!) "நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன் பாணியில் EPF அலுவலகம் இப்பொழுது செல்ல வேண்டியது தானே..

குடந்தை மாவட்ட BSNLEU சங்க அலுவலகத்திற்கு தனியார் காண்டிராக்டரை எத்தனை முறை வரவழைத்து பேசினீர்கள்.... அப்பொழுதெல்லாம் இது தெரியாதா.......

ஏன் இந்த நாடகம்! அரிதாரம்!

முதலில் ஒன்றை தெளிவுபடுத்துங்கள் இந்த ஆர்ப்பாட்டம் நிர்வாகத்தை கண்டித்ததா....? தனியார் காண்டராக்டரை கண்டித்ததா....? அப்படியே யாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்றாலும் பொதுமேலாளர் அலுவலகத்தில் நடத்தாமல் தொலைபேசி நிலையத்தில் ஆவர்த்தனம் ஏன்.......?

"பினாமி" முகம் கறுத்து விட்டதே என்ற நாணமா?