Skip to main content

புத்தாண்டின் நம்பிக்கை .... இது ஆரம்பம்மே ......






வாழ்க NFTE! வெல்க NFTE!

15-12-2011 போராட்ட கோரிக்கைகளில் ஒன்று நமது சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்என்பது. அதன் அடிப்படையில் 15% வாக்கு பெற்ற சங்கத்திற்கு நிர்வாகத்திடம் ஊழியர் பிரச்னையை விவாதிக்கும் தொழிற்சங்க சலுகையை வழங்கி BSNL உத்திரவிட்டுள்ளது. இது முழு அங்கீகாரத்தை பெறுவதற்கான முதற்படி. இந்த சலுகையை பெற பாடுபட்ட அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி!!!



Our union has been accorded trade union
Facilities by the BSNL.
This is the first step towards obtaining
full recognition.
Let us pledge to work with full vigour
for the welfare of the BSNL workers
and strengthen NFTE-BSNL, thecitadel
of BSNL Workers.
We thank all those who helped to get
the same.

Popular posts from this blog

சங்க பணி சிறக்க வாழ்த்துக்கள் .

  AIBSNLEA  வேலூர் மாநில மாநாடு -புதிய மாநில சங்க நிர்வாகிகள்  தலைவர் : தோழர் .T .தமிழ் செல்வன் SDE -சேலம்  செயலர் : தோழர் .C .துரையரசன் CAO -தஞ்சை   பொருளர் : W  V  ரங்கநாதன்  AO -சென்னை  மற்றும்  குடந்தை மாவட்ட தோழர் B .குரு மூர்த்தி JAO  மாநில செயற்குழு உறுப்பினர்  சங்க பணி  சிறக்க வாழ்த்துக்கள் .

தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான எஸ்.எஸ். தியாகராஜன் (73) சென்னையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சென்னை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரான எஸ்.எஸ்.தியாகராஜன் திருமணம் ஆகாதவர். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் அறை ஒன்றில் வசித்து வந்தார். சிறந்த மார்க்சிய அறிஞரான அவர் ஜெர்மனியில் ஓராண்டு காலம் மார்க்சிய கல்வி பயின்றவர். சிறந்த தொழிற்சங்கவாதியான தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச்செயலாளராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய மூத்த துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாந...

ஏணியை கூரை மீது போடாது வானத்தை நோக்கி நிறுத்துவோம் !

தேர்தல் ... அது சிம்மாசனத்தை கவிழ்த்திருக்கிறது  கவிழ்ந்தவனை நிமிர்த்தி சிம்மாசனத்தில் அமரவைதிருக்கிறது ... அமர்ந்தவன் தானே என்றான் ... தூக்கி வீசி பாடம்  சொல்லி இருக்கிறது . BSNLEU  சங்கம்  சந்தா செலுத்தும்  உறுப்பினர்  1,14,534 வாக்கும் எல்லாம் தனக்கே என்ற கணித சூத்திரம் பொய்த்துப்போனது ! NFTE  சங்கம் BSNLEU வின்  எதிர் வினை வாக்கை  தன்  வசம் ஈர்த்துள்ளது .... BSNLEU சங்கம் தனது தேர்தல் முடிவு அறிக்கையில் ... " NFTE  தேர்தல் பிரசாரம் எல்லாம் கேட்டோம் ... அதையெல்லாம்  தீர்த்து வைக்கிறோம்  என அறிக்கை கூட விடவில்லை ! BSNLEU  என்ன நினைத்து  இருக்கிறது என்றால் ? BONUS  தொழிலாளி விரும்பவில்லை ! LTC விரும்பவில்லை ? அதை போல இழந்த  எதுவும் விரும்பவில்...