வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, January 19, 2012

அக்கம் .... பக்க .... இணைய சூடான செய்திகள் ......

வேலூர் இணைய செய்தி ....
பொது மேலாளருக்கு மட்டுமே வாகன வசதி என்று BSNL முடிவெடுத்திருப்பதாக நமது அகில இந்திய சங்கம் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பளம் கொடுக்கவே பணம் இல்லாததாலும், மேலும் பல தேவைகளுக்காகவும் BSNL ரூ.15000 கோடி கடன் வாங்க உள்ளதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. ஆனால், வேலூரில் இருக்கும் வெட்கம் கெட்ட அதிகாரிகள் சிலருக்கு இதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை. ரூ.60000, 70000 என்று சம்பளம் வாங்கிய போதிலும் இரு சக்கர வாகனத்திலோ, வேறு வழிகளிலோ அலுவலகம் வருவதில்லை - இலாகா வாகனத்தில் தான் வருவர். அதிலும் குறிப்பாக, நாங்கள் தான் BSNL -ஐ காக்க பிறந்தவர்கள் என்று பறை சாற்றிக்கொள்ளும் அதிகாரிகள் சங்கத்தைச் சார்ந்தவர்கள்தான் இதில் அதிகம். அவர்களில் பலர் மாவட்ட சங்க இன்னாள் - முன்னாள் நிர்வாகிகள். கஜானா காலி என்று சொல்லி இவர்களை வீட்டுக்கு அனுப்பும் வரை இந்த சுகங்களை விட்டுத்தர தயாராக இல்லாத இந்த கூட்டத்திற்கு ”diabolical " என்று அடிக்கடி எழுத என்ன அருகதை உள்ளது ? Only these people are devils. Blood suckers.