BSNL நிர்வாகம் மூன்றாவது ஊதிய கமிட்டியின் பரிந்துரை மீது தன் கருத்துக்களை சற்று விமர்சன பார்வையுடனும் லட்சக்கணக்கான அதிகாரிகள் அதை தொடர்ந்து ஊழியர்களுக்கு நியாயம் வழங்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் DOTக்கு எழுதியுள்ளது. பொதுத்துறை ஊழியர்களில் 16 சதம் அளவிற்குள்ள நமது துறைக்கு தனித்த கவனத்தை ஊதிய கமிட்டி தந்திருக்கவேண்டும் என்ற கருத்தை நிர்வாகம் வெளியிட்டுள்ளது அரசாங்கம் முடிவெடுத்தவுடன் தங்கள் அதிகாரிகளுக்கு 15 சதம் ஊதிய முன்னேற்றம் தந்திட அனுமதிக்கவேண்டும் என்ற வேண்டுகோளும் விடப்பட்டுள்ளது. போராட்டங்களை தவிர்க்கவும், போட்டி சூழலை உணர்ந்து ஊழியர்களை உற்சாகப்படுத்தவும், லாபம்நோக்கிய திசையில் பயணிக்க துவங்கும் நிறுவனத்தில் முழுமையான் அமுலாக்கம் அவசியம் என நிர்வாகம் கருத்து சொல்லியிருக்கிறது. பென்ஷன் பங்களிப்பும் கூட இறுதி நிலையில் கூடாது, அவரவர் சமபள நிலையில் என கோரியுள்ளது.ஊழியர்கள் கம்பெனிக்குள் நுழையாமல் இருந்திருந்தால் 7வது ஊதியக்குழு பரிந்துரையை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்கிற தனித்தனமை கணக்கில் கொள்ளப்படவேண்டும் எனவும் நிர்வாகம் அழுத்தமாக கடிதம் எழுதியுள்ளது. அரசு ஏற்கவேண்டும்