Skip to main content

Posts

Showing posts from February, 2011
BSNL நிர்வாக லட்சணம் அமைச்சர் கபில் சிபிலுக்கு கடிதம் BSNL CMD குல்தீப் கோயால் ஜூலை 2010 ல் ஓய்வு பெற்றார் எனவே CMD காலி இடத்தை நிரப்ப இடைக்கால ஏற்பாடாக DIRECTOR(HR) திரு கோபால்தாஸ் அவர்கள் CMD பொறுப்புகளை சேர்த்து பார்க்க பணிக்கப்பட்டுள்ளார். அனால் BSNL முக்கிய நிதி நிர்வாகத்தை பார்க்கும் DIRECTOR FINANCE (POST) கடந்த இரண்டாண்டு காலமாக காலி இதனையும் DIRECTOR(HR) கூடுதலாக பார்த்து வந்தார் CMD+DIRECTOR+DIRECTOR(HR) பார்க்கிறார். இவரும் வரும் பிப்ரவரி 28 ல் ஓய்வு பெறுகிறார். இதுமட்டுமல்ல DIRECTOR ENTERPRISES இடம் ஒரு வருடமாக காலியகவேயுள்ளது இந்த நிலை தொடர்ந்தால் நிர்வாகம் எப்படி உருப்படும் ...? நமது பொதுச்சயலாளர் C.சிங் 21.02.௧௧ அன்று இந்த பொறுப்பற்ற தன்மை பற்றி நமது துறை அமைச்சர் கபில் சிபில் அவர்களுக்கு கடிதம் எழுதயுள்ளார். இதையெல்லாம் பற்றி கவலைப்பட தோழர் அபிமன்யுவிற்கு எது நேரம் ...? தமிழகதில் , பாண்டியில் தோற்றுப்போனதால் ...... ஆள் பிடிப்பதில் படு பிசி உஷார் ..... உஷார் .... click here: http://www.nftechq.co.in/pdf/truncated21022011.doc தோழமையுடன் R. ஜெயபால் மாநில துணைத்தலைவர்
BSNL நிர்வாகத்தின் சித்து விளையாட்டு நடந்தேறிய தேர்தலில் BSNLEU சங்கம் மொத்த வாக்குகளிலோ அல்லது பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் கூட 50% சதிவீத வாக்குகளை பெறவில்லை . ஆனால் இம்முறை NFTE இயக்கம் 11 மாநிலங்களில் மற்றும் பல SSA களில் முதன்மை சங்கமாக வெற்றி பெற்றுள்ளது . ஆனால் 50% சதவீதத்திற்கு குறைவான வாக்குகளை பெற்ற BSNLEU சங்கத்திற்கு அங்கிகாரம் தந்துள்ள கடிதத்தில் BSNL SR CELL - ஒத்துகொண்ட CODE OF DISCIPLINE என்று விஷமத்தானமான வார்த்தையை புகுத்தியுள்ளது . பத்தாம் பசலி CODE OF DISCIPLINE யை ஏற்க வில்லை என்று சொல்லி 11 சங்கங்கள் வெளி நடப்பு செய்தன. ஏற்கிறோம் என எந்த விதமான ஒப்புதல் கடிதமும் தரவில்லை . இதனை கண்டித்து நமது பொதுச் செயலர் CMD க்கு கடிதம் எழுதியுள்ளார் . மேலும் இரண்டாவது சங்கத்திற்கு அங்கீகாரம் வலியுறுத்தி 21.02.2011. அன்று கடிதம் எழுதியுள்ளார். கடித நகல் CLICK HERE http://www.nftechq.co.in/pdf/secondunion.doc தோழமையுடன் R. ஜெயபால் மாநில துணை தலைவர்
கனரா வங்கியுடன் MOU ஒப்பந்தம் புதுபிக்கபட்டுள்ளது . BSNL நிர்வாகம் ஊழியர்கள் வீட்டு வசதிகடன் , நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகன கடன் , பர்சனல் லோன் மற்றும் NATIONAL CALAMITY LOAN ஆகிய கடன்கள் பெறுவதற்கு 23.02.2011 அன்று ஒப்ந்தத்தை புதுபித்துள்ளது. (MEMO NO 1-P/BBF/STAFFLOAN/10-11 DT 23.02.2011 ) click here http://www.nftevellore.org/MOU%20Can%20Bank%202011.pdf NFTE மாவட்ட சங்கம்
காரைக்கால் வாடிக்கையாளர் சேவை மையம் ..? அத்தியாவசிய அடிப்படை வசதிகள் , முன் ஏற் பாடு கவனக்குறைவால் , சரிந்த BSNL மரியாதை ..... பாட்டரி மற்றும் மின் மாற்று ஏற்பாடுகள் அறவே இல்லை பல மாதங்களாய் .. சுனாமி வந்த பொழுது தானே என நீங்கள் நினைத்தால் அது தவறு .! கடந்த ஆறு மாதமாய் தொடரும் அவலம் ..? வாடிக்கையாளர்கள் திரண்டு , BSNL காரையில் முற்றுகை ... காரைக்கால் நிர்வாகமோ , கும்பகோணம் நிர்வாகத்தை கை காட்டியது , மாவட்ட நிர்வாகம் தலையிட்டது ... வழக்கமான செய்தி தானே இது என்று நீங்கள் நினைக்கலாம் தீர்ந்தபாடில்லை எனவே தனியார் தொலைகாட்சிகள், BSNL பாரீர் அவர்கள் சேவை பாரீர், என மானம் வாங்கியது . போதா குறைக்கு உள்ளூர் சேனல் வேறு கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கியது. நமது தோழர்கள் மற்றும் தோழமை சங்க தோழர்களும் தலையிட்டு ,நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் கண்டார்கள் . தற்காலிக தீர்வு காணப்பட்டது . நெறி சார்ந்த கேள்வி : இதற்க்கெல்லாம் யார் தான் பொறுப்பு ? அடிமட்ட தோழன் பல்பம் , பென்சில் , எடுத்தான் என்றால் BSNL இமேஜ் , BSNL இமே...
ஏன்டா வேலா .... நம்ம பிரதமர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிய டிவி ல பார்த்ததுல இருந்து நான் ஒரு முடிவுக்கு வந்துட்டன் அது என்ன தெரியுமா ? இனிமே நான் யாரையும் ஒன்னுமே தெரியாதுன்னு முழிக்காதே அப்படின்னு சொல்லவே மாட்டேன் வேலா ! ஆனா ஒண்ணுடா .... பேட்டியின் பொழுது ஆதர்ஷ் ஊழல் விவகாரத்தில் கார்கில் ராணுவ ஜவான்களுக்கு வீடு தர சொன்னத சவானுக்கு தர சொன்னதா தப்ப புரிந்து முதல் மந்திரியே வீட்டை ஒதுக்கிகிட்டார் .....அப்படின்னு நம்ம பிரதமர் சொல்லல அவ்வளவுதான் ... தமாஷ் தான் நீ போடா ... என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ...... 23-02-2011
வணக்கம் நீங்கள் மேல் பார்ப்பது , நபர் பெயர் கும்பமுனி மாடு மேய்ப்பவர் போல் தெரிகிறதா ? ஆம் அந்த பணி தான் அவர்க்கு , மாடு மேய்க்க சென்றவுடன் மரத்தடியில் ஆழ்ந்த சிந்திக்க தொடங்கிவிடுவார் கும்பமுனி . அந்தி சாயும் வேலையில் வீடு திரும்பும் போது தான் சிந்தித்த விஷயங்களை தன் ஒரே சொந்தமான வாயில்லா ஜீவன் மாட்டோடு கேள்வி கேட்டு வீடு திரும்புவார் . கேள்வி என்றால் எப்படி ? எகிப்தபுரட்சிபற்றி , S பேண்ட் குறித்தும் , குவார்ட்டர் கட்டிங் தமிழ் வார்த்தையா ? எனவும் , தமிழக மீனவர் குறித்தும் , பிரதமர் நேர் சந்திப்பு குறித்தும் , இவர் சிந்திக்காத விசயமே இல்லை எனலாம் ,இனி அடிக்கடி நம் இணையத்தில் தோன்றி சந்தேகம் எழுப்புவார் . அது சில நேரங்களில் விவரமாய் இருக்கும் , நக்கலாகவும் , லொள்ளு பிடித்தாய் இருக்கும் . அது சரி அது என்ன கும்பமுனி , பெயர் காரணம் என்ன ?குடந்தையில் உருவான கேரக்டர் எனவே( கும்ப ) , சூடிய பூ சூடற்க சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடனின் கேரக்டர் ( கும்ப முனி )வேறுஒன்றுமில்லை சரி விகிதத்தில் அரசியல் , தொழிற்சங்கம் , இலக்கியம் ,என அனைத்தும் கலந்து இருக்கும் ..!விமர்ச...
தோழர். M. செல்வபாண்டியன் TM/MM இல்ல திருமண விழா மணமக்கள் நலம் பல பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள். நாள் : 23.02.2011 (புதன் கிழமை ) மணமகன் : K. கண்ணன் (எ)சுவாமிநாதன் மணமகள்: S. நித்யா இடம் : ராணி மஹால் காவேரி நகர் டான்சி ரோடு மயிலாடுதுறை நேரம் : காலை 09 to 10.30 சமூக சிந்தனை முன்னிறுத்தி , மணமக்கள் நலம் பல பெற்று இருந்தமிழ் போல் பல்லாண்டு வாழ்க ! மாவட்ட சங்கம் -NFTE- குடந்தை
பிப் -23 கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் 1. விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர 2. பெட்ரோல் விலையை தாறு மாறாய் உயர்த்தாதே 3.விவசாயிகளின் வாழ்வாதாரம் குலைக்காதே 4. பொது துறை நிறுவனங்களை சீரழிக்காதே 5. BSNL துறையை முடக்காதே நலிவுஅடைய செய்யாதே 6. VRS குழுவை ரத்து செய் கோரிக்கைகளை வலியுர்த்தி கிளைகள் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கேட்டு கொள்ளுகிறோம் . தோழமையுடன் s .பாஸ்கரன் - G கலியமூர்த்தி 23-0௨-2011 மாலை 5.00 GM அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
சிரம் தாழ்ந்த அக வணக்கம் ! ஈழ தமிழ் போராளி பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி அம்மாள் இயற்கை எய்தினார். உரிமைகள் என்றும் மறையாதது .
BSNLEU-யின் தீமை கொல்ல நாணம் என்ன ... ? ? தோற்றவர்கள் வழக்காடு மன்றம் ஓடுகிறார்கள் என நியாயம் பேசுகிறார்கள் சிலர்..? அகில உலகத்திலும் இல்லாத புதிய முறையையா NFTE கேட்கிறது? வெறும் 46.57 % சத வாக்குகளை பெற்று வெற்றி வெற்றி என கூச்சலிடுவதை பற்றியெல்லாம் கவலயில்லை..!! 46.57% சத வாக்குகளை BSNLEU பெற்றுள்ளது என்றால் BSNL-ல் 54% சத ஊழியர்கள் BSNLEU இன் எதிராக உள்ளார்கள் என்பது தான் பொருள். ஒரே சங்கம் என்றால் அது 51% சத வாக்கினை பெற்றிருக்கவேண்டும். இந்த தர்க்க நெறி (LOGIC ) அடிப்படையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு NLC பொதுத்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தந்த தீர்ப்பின் வழிகாட்டல் சாராம்சம் " எண் கணக்கில் முதல் இடம் பிடித்த சங்கத்திற்கும் 51% சதம் இல்லையெனில் 2வது இடம் பிடித்த சங்கத்தையும் அங்கீகரிக்கவேண்டும், இரு சங்கங்களும் சேர்ந்தபிறகு 51% சத பிரதிநிதித்துவம் எட்டப்படவில்லையெனில், 3-வது இடத்தை பிடித்துள்ள சங்கத்திற்கும் அங்கிகாரம் தரலாம் " இதுவே NLC-ல் தந்திட்ட நீதிமன்ற வழிகாட்டல் . இது BSNL-க்கு பொருந்தாதா .... ? "நீதி மன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டுவது ஜனநாயக விரோதமா....

குப்தா வருகை புகைப்பட பதிவுகள்

குடந்தையில் தலைவன் O.P. குப்தா NFTE என்றும் - எப்படியும் - எந்த நிலையிலும் - துளிர்த்து கொண்டே இருக்கும் என்பதன் அதட்சிக்கான கூட்டம் உற்சாக துள்ளலோடு குடந்தை குலுங்கியது தலைவனை வரவேற்று குடந்தை நகர் வீதிகளில் முழக்கத்தோடு தொலைபேசி நிலையம் வரை வரவேற்பு இனிப்பு களோடு பாசமாய் தலைவனை சந்தித்தனர் தோழர்கள். காரைக்குடி, திருச்சி, கடலூர், தஞ்சை, பட்டுகோட்டை, என பக்கத்துக்கு மாவட்ட பாச கூட்டம் சிலர் சிலர் G. கலியமூர்த்தி மாவட்ட துணை செயலர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அனைவரையும் வரவேற்று சிறப்புரை வழங்கினார் . குடந்தை தோழர் S. பாஸ்கரன் மாவட்ட செயலர் சிறப்பான துவக்க உரை வழங்கினார் தோழர் மாரி காரைக்குடி :- NFTE ஐ தோற்றுப்போன கூட்டம் என்கிறார்கள் - குடந்தை வந்துபார்த்தால் - நெஞ்சு நிமிர்த்தி உற்சாகத்தோடு NFTE - தலைதொங்களோடு BSNLEU . தோழர் பிரின்ஸ் தஞ்சை :- எந்த நிலையிலும் தஞ்சையும் NFTE ஐ தூக்கிபிடிக்கும் . தோழர் ஜெயராமன் மாநில பொருளாளர் கடலூர்:- தலைவன் குப்தா வின் 100 வயது நிறைவு விழாவையும் குடந்தையில் கொண்டாடுவோம் தோழர் சேது மதுரை :- எனது தந்தையின் பெயரை விட அதிகம் உச்சரித்தது த...
புதுமனை புகுவிழா தோழர். K. காசிவிஸ்வனாதராவ் JAO/KMB இல்ல புதுமனை புகுவிழா நலம் பல பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள். நாள் : 18.02.2011 (வெள்ளி கிழமை) இடம் : மனை எண் 129 சுந்தரபுரம் 3 தெரு ( சாந்தி பிரியா திருமண மண்டபம் பின்புறம் ) தஞ்சாவூர். பேருந்து நிறுத்தம் : E.B. காலனி தோழமையுடன் மாவட்ட சங்கம்
வணக்கம் நீங்கள் மேல் பார்ப்பது , நபர் பெயர் கும்பமுனி மாடு மேய்ப்பவர் போல் தெரிகிறதா ? ஆம் அந்த பணி தான் அவர்க்கு , மாடு மேய்க்க சென்றவுடன் மரத்தடியில் ஆழ்ந்த சிந்திக்க தொடங்கிவிடுவார் கும்பமுனி . அந்தி சாயும் வேலையில் வீடு திரும்பும் போது தான் சிந்தித்த விஷயங்களை தன் ஒரே சொந்தமான வாயில்லா ஜீவன் மாடு கூட கேள்வி கேட்டு வீடு திரும்புவார் . கேள்வி என்றால் எப்படி ? எகிப்தபுரட்சி vபற்றி , S பேண்ட் குறித்தும் , குவார்ட்டர் கட்டிங் தமிழ் வர்ர்தையா ? எனவும் , தமிழக மீனவர் குறித்தும் , பிரதமர் நேர் சந்திப்பு குறித்தும் , இவர் சிந்திக்காத விசயமே இல்லை எனலாம் ,இனி அடிக்கடி நம் இணையத்தில் தோன்றி சந்தேகம் எழுப்புவார் . அது சில நேரங்களில் விவரமாய் இருக்கும் , நக்கலாகவும் , லொள்ளு பிடித்தாய் இருக்கும் . அது சரி அது என்ன கும்பமுனி , பெயர் காரணம் என்ன ?குடந்தையில் உருவான கேரக்டர் எனவே கும்ப , சூடிய பூ சூடற்க சாகித்ய அகடமி விருது பெற்ற நாஞ்சில் நாடனின் கேரக்டர் கும்பமுனி வேறுஒன்றுமில்லை ..!
தொழிற்சங்க இமயம் ! தானை தலைவன் ! தன்னேரில்லா தலைமை ! தொலைபேசி தொழிற்சங்க காவியதலைவன் குப்தா குடந்தை வருகை ! மாபெரும் சிறப்பு கூட்டம் 11.02.2011 வெள்ளிக்கிழமை / மாலை 5 மணியளவில் இடம் : குடந்தை தொலைபேசி நிலைய வளாகம் சிறப்புரை தோழர் O.P . குப்தா தோழர் . ஆர் .கே தோழர் . கடலூர் G. ஜெயராமன் பேரணியாய் பெரும் படையாய் திரண்டு வாரீர்! வாரீர் ! ! தலைவர் குப்தாவை பாலக்கரை சென்னை சாலை சந்திப்பில் ஆர்ப்பரித்து வரவேற்க இருசக்கர வாகனத்தில் தயார்படுவோம் !
தமிழ் மாநில தேர்தல் முடிவுகள் (ஆபீசியல் காப்பி) (கிளிக் செய்யவும்) http://nftetn.org/imporders/elec%2003.02.11.pdf அகில இந்திய தேர்தல் முடிவுகள் (ஆபீசியல் காப்பி) (கிளிக் செய்யவும்) http://www.snatta.org/news/Resultfeb.pdf